ஸ்ரீ நம்மாழ்வார் சபா
திருநெல்வேலியை தளமாகக் கொண்டு, மதிப்பிற்குரிய டி.கே. ராமானுஜ கவிராஜரால் நிறுவப்பட்ட, பக்தி, ஞானம் மற்றும் தன்னலமற்ற சேவையைப் பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் சபா, ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டிற்கான ஒரு கலங்கரை விளக்கமாகும்.

பாடல்களால் பரவும் பக்தி
பண், இலக்கியம், கலை, ஆழ்வார்களின் பாடல்கள் போன்றவற்றால் ஆன்மீக விழுமியங்களை எழச் செய்தல்.

தெய்வீக ஞானம்
வைணவம் மற்றும் உலகளாவிய தெய்வீகம் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை அறிவார்ந்த வெளியீடுகள் மூலம் பகிர்ந்து கொள்வது.

இறையுணர்வின் சமூகத் தொண்டு
இறையுணர்வில் தோய்ந்த கல்வித் தொண்டு, ஆதரவற்றோருக்கு உதவி, மருத்துவத் தொண்டு தொடர்ந்து வழங்கப் பெறும்.
ஸ்ரீ நம்மாழ்வார் சபா ஒரு தனியார் தொண்டு நிறுவனம். அதனால் நன்கொடைகள் ஏற்கப்படாது
இறையுணர்வில் தோய்ந்த தொண்டு
திருநெல்வேலியை தளமாகக் கொண்டு, மதிப்பிற்குரிய டி.கே. ராமானுஜ கவிராஜரால் நிறுவப்பட்ட, பக்தி, ஞானம் மற்றும் தன்னலமற்ற சேவையைப் பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் சபா, ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டிற்கான ஒரு கலங்கரை விளக்கமாகும்.
எமது கொள்கைகள்

பண்ணில், பாட்டில் பரவும் பக்தி
இசை மற்றும் கவிதைகள் மன உறுதியை உயர்த்தும். பல்வேறு கலாச்சார முன்னெடுப்புகளின் வாயிலாக பக்தியை, இறையுணர்வை அதன் தூய வடிவத்தில் பரப்பவும், பாடல்களால் இதயங்களை உயர்த்தவும் விழைகிறோம்.

எண்ணில் இதுவே மானுட சக்தி
உலகில் ஆன்மிக அறிவையும் உணர்வையும் வளர்ப்பதே எங்கள் நோக்கம். நல்ல ஆய்வுகளினால், கல்வியினால் கண்டடைந்த ஆன்மிக அறிவலையை மின்னிதழ்களாக, பத்திரிகைகளாக, நூல்களாக, இசை வார்ப்புகளாகச் செய்து அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம். ‘இறைநெறி’ என்ற மின்னிருவில் வரும் திங்களிதழ், இப்பணிக்கான தலையாய சான்றாகும். இறைநெறியை இதழை இவ்வலைமனையில் பதிவிறக்கம் செய்து, படித்துப் பயனுறலாம்.

மண்ணில் தொண்டே இறையின் வழி
கல்வித் தொண்டும் ஆதரவற்றோருக்கு ஆற்றும் நல்லுதவியுமே அந்த வழி என்று நம்புகிறோம். எனவே, மிகுந்த ஏழ்மையிலிருக்கும் குழந்தைகளுக்கான கல்வி, கல்வி நிறுவனங்களின் மூலமாக உதவி போன்றவற்றில் ஈடுபடுகிறோம். மருத்துவத் தொண்டு, வயதான, ஆதரவற்றோருக்கான இல்லங்கள் போன்றவையும் இதில் அடங்கும். எமது ஒவ்வொரு தொண்டிலும் மையப்புள்ளியாக, வழிகாட்டும் ஒளியாக இறையுணர்வே விளங்கக் காண்கின்றோம். இது நமது செயல்கள் எப்போதும் உயர்ந்த நோக்கத்துடன் இணைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
எமது தொண்டுகள்
இறையன்பும், சமூக மேம்பாட்டுக்கான தொண்டுமே முழுமையான உள்வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அவ்வழியில் இப்பணிகளை மேற்கொள்கிறோம்.
கல்வித் தொண்டு
தார்மீக, ஆன்மிக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட தரமான கல்வியை வழங்க உழைக்கிறோம். அது அடுத்த தலைமுறைக்கு அறிவு, ஞானம் மற்றும் நல்நோக்கம் போன்றவற்றை நல்க வல்லது. உண்மையான கல்வி அறிவை மட்டுமல்ல, நல்லெண்ணங்களையும், நல்லுணர்வுகளையும் வளர்க்கிறது. தற்போதைய பணிகள்:
- குறைந்த ஆண்டு வருமானம் கொண்ட இல்லங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு ஆதரவளித்தல்.
- பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கான உதவித்தொகைத் திட்டங்கள்.
ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் நல்ல வகையில் வளர பாதுகாப்பான, அன்பான சூழலை வழங்குவது எங்கள் நோக்கம். இந்த அடிப்படைகளினால் அமைக்கப்பெற்ற கூடுகளை உருவாக்குவோம். சரியான பராமரிப்பு, நல்ல கல்வி மற்றும் நம்பிக்கையும், பொறுப்பையும் வளர்க்கும் சூழலை உருவாக்குவோம்.
- தேவைப்படும் குழந்தைகளுக்குக் கல்வி, தங்குமிடம் மற்றும் பராமரிப்பை வழங்குதல்.
- சத்தான உணவு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு.
- அக்குழந்தைகளுக்கு ஓர் இனிய குடும்பத் சூழலைத் தருதல்.
எதிர்காலத் திட்டங்கள்
முதியவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருத்துவ இல்லங்களின் வடிவில் பராமரிப்பை விரிவுபடுத்துவதே எங்கள் தொலைநோக்குப் பார்வை.
இத்தகைய நிறுவனங்களுக்கும் அப்பால், வாழ்க்கையின் சவால்களை யாராயினும் நம்பிக்கையுடனும் மீள்தன்மையுடனும் எதிர்கொள்ள உதவும் சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம்.
இவை ஒவ்வொரு செயலிலும் தெய்வீகக் கொள்கைகளை உள்ளடக்கி, சமூகத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் வெளிப்பாடுகளாகும்.

இறைநெறி – மின்திங்களிதழ்
‘இறைநெறி‘. இது இறை வழியில் ஆழமான ஞானத்தை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மின்திங்களிதழ் [Monthly E-magazine]. இது எமது முதன்மையான பணி. ஒவ்வொரு இதழிலும் கடவுள் பற்றிய நுண்ணறிவு மிக்க கட்டுரைகள் இடம்பெறும். பல்வேறு சமய, ஆன்மிகக் கண்ணோட்டங்களை வரைந்து, உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஊற்றுக்கண்ணாக விளங்கும்.
சமீபத்திய இதழை விலையின்றிப் பதிவிறக்கவும்
‘இறைநெறி’யின் சமீபத்திய இதழை நீங்கள் கீழே விலையின்றிப் பதிவிறக்கம் செய்யலாம். படித்து மகிழ்ந்து பயனுறலாம்.
அனைத்து இதழ்களையும்இறைநெறி குழுவில் சேர்க
இறைநெறி நேரடியாக தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேர மின்திங்களிதழின் குழுவில் சேர்ந்து கொள்க.
Contact us
தங்களது கருத்துகளையும், பின்னூட்டங்களையும் வரவேற்கிறோம். எங்களது பணிகள் மேலும் மிளிர அவை உதவும். எங்களுடன் தொடர்பு கொள்ள கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அல்லது அருகேயுள்ள படிவத்தைப் பயன்படுத்தி, தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ நம்மாழ்வார் சபா
79, வ. வு. சி. தெரு, திருநெல்வேலி டவுன்,
திருநெல்வேலி – 627 006
தமிழ்நாடு, இந்தியா
Get In Touch
Email: ramkallapiran@outlook.com
Working Hours: Mon-Fri, 9 AM – 5 PM